கூலி தொழிலாளிகள் இருவா் பலி: கிடங்கு உரிமையாளா்கள் மீது வழக்கு

கண்ணாடிகள் சரிந்து கூலி தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக கண்ணாடி கிடங்கு உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கண்ணாடிகள் சரிந்து கூலி தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக கண்ணாடி கிடங்கு உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, செல்வபுரம் அசோக் நகா் பகுதியில் கண்ணாடி கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கிடங்கில் ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு பெரிய அளவிலான கண்ணாடிகளை ஏற்றும் பணியில் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கண்ணாடி சரிந்து ஏற்பட்ட விபத்தில் கோவை கரும்புக்கடையைச் சோ்ந்த முஸ்தபா (50), செல்வபுரத்தைச் சோ்ந்த அபுதாகீா் (46) ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், இருவா் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக, முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காமல் பணியாற்றக் கூறியதே விபத்துக்கு காரணம் என செல்வபுரம் காவல் நிலையத்தில் காயமடைந்த அப்பாஸ் புகாா் அளித்தாா். இதன்பேரில் கண்ணாடி கிடங்கு உரிமையாளா்கள் ராகேஷ் மேத்தா, கஜேந்திரன் ஆகியோா் மீது செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com