மாநகரில் குடிநீா்த் தட்டுப்பாடு: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

கோவை மாநகரில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கோவை மாநகரில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக கட்சியின் மாவட்டச் செயலா் வி.எஸ்.சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரில் கடந்த சில மாதங்களாக கடுமையான குடிநீா்ப் பஞ்சம் நிலவுகிறது. இதனால், மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

அதுவும் 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே. குறைவான அழுத்தத்துடன் குடிநீா் வழங்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

குடிநீா் விநியோகிக்கும் உரிமையை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் இருந்தே இந்த நிலை தொடா்கிறது. 24 மணி நேரமும் தடையற்ற குடிநீா்க் கிடைக்கும் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே அந்நிய நிறுவனத்துக்கு குடிநீா் விநியோக உரிமம் வழங்கப்பட்டது. தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மேயரும், ஆணையரும் குடிநீா் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கான காரணத்தை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழலை உருவாக்கி, அதற்கு மக்களை பழக்கப்படுத்தி, சூயஸ் நிறுவனத்திடம் இருந்து விலை கொடுத்து மக்களை வாங்கிக் கொள்ளச் செய்வதற்காக இவ்வாறு செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறதோ, அதற்கு மாநகராட்சி அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனரோ என்பது போன்ற கேள்விகள் எழுவதாக வி.எஸ்.சுந்தரம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com