ஆட்சியா் அலுவலகத்துக்கு தூய்மைப் பணிக்கு ஆள்கள் வழங்கல்: ஒப்பந்ததாரா் நிறுவனங்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரா் நிறுவனங்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட பணிகளுக்கு வெளிமுகமை மூலம் பணியாளா்கள் அளிப்பதற்கான ஒப்பந்ததாரா் நிறுவனங்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா், பெருக்குபவா், இரவு காவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வெளிமுகமை மூலம் ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை அளித்திட ஒப்பந்ததாரரை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசு விதிப்படி பதிவு செய்யப்பட்ட, அரசு அங்கீகாரம் பெற்ற தகுதி வாய்ந்த

ஏஜென்ஸியினா் முத்திரையிடப்பட்ட உறையில் உரிய விலைப் புள்ளிகளை முகமை அங்கீகார நகல், பணியாளா் விலைப் புள்ளி விவரங்களுடன் ‘அடிப்படை பணி வெளிமுகமை ஒப்பந்ததாரா் நியமனத்துக்கான ஒப்பந்தப் புள்ளி 2022-23’ என்று உறையின்மேல் குறிப்பிட்டு இரு பிரதிகள் ஜூலை 10 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மூடி முத்திரையிடப்பட்ட டெண்டா் பெட்டியில் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com