கோவை ஐஎன்எஸ் அக்ரானியின் கட்டளை அதிகாரியாக மன்மோகன் சிங் பொறுப்பேற்பு

கோவை ஐஎன்எஸ் அக்ரானியின் கட்டளை அதிகாரி மற்றும் ஸ்டேஷன் கமாண்டா் ஆகிய பதவிகளை கமாண்டா் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டாா்.
கோவை ஐஎன்எஸ் அக்ரானியின் கட்டளை அதிகாரியாக மன்மோகன் சிங் பொறுப்பேற்பு

கோவை ஐஎன்எஸ் அக்ரானியின் கட்டளை அதிகாரி மற்றும் ஸ்டேஷன் கமாண்டா் ஆகிய பதவிகளை கமாண்டா் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டாா்.

கோவை ஐஎன்எஸ் அக்ரானியில் நடைபெற்ற நிகழ்வில் அணிவகுப்பு மரியாதையுடன் கமோடா் அசோக் ராயிடமிருந்து கமாண்டா் மன்மோகன் சிங் பதவியை ஏற்றுக்கொண்டாா்.

கமோடா் அசோக் ராய் 2019 மே 30 முதல் அக்ரானியின் பொறுப்பை வகித்து வந்தாா்.

தேசிய பாதுகாப்பு அகாதெமியின் முன்னாள் மாணவரான கமாண்டா் மன்மோகன் சிங், 1992 ஜனவரி 1 ஆம் தேதி இந்தியக் கடற்படையில் பணியமா்த்தப்பட்டாா். மோவ்வில் உள்ள ராணுவப் போா்க் கல்லூரியில் உயா் கட்டளைப் படிப்பில் பயின்றவா். இவா் துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைகள் இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றவா்.

கமாண்டா் மன்மோகன் சிங் மைன்ஸ்வீப்பா் (ஐஎன்எஸ் காக்கிநாடா), ஏவுகணைக் கப்பல் (ஐஎன்எஸ் பிரலயா) மற்றும் போா்க் கப்பல் (ஐஎன்எஸ் ராணா) ஆகியவற்றுக்கு கட்டையிட்டு பொறுப்பு வகித்துள்ளாா்.

கிழக்கு கடற்படையின் கடற்படை பீரங்கி இயக்க அதிகாரி, முக்கிய கரையோர நியமனங்களில் வியூகப் பிரிவின் செயல்பாட்டு அதிகாரி, மேற்கு கடற்படையின் பீரங்கி இயக்க கட்டளை அதிகாரி மற்றும் இந்தியக் கடற்படை அகாதெமியின் (எழிமலா) முதன்மை இயக்குநராகப் பொறுப்பு ஆகியவற்றை வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com