'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என ரஜினி பாணியில் மீண்டும் வந்த ஒற்றை காட்டு யானை

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவ மலையில் நேற்று மாலை ஒற்றை காட்டு யானை அரசுப் பேருந்தை துரத்தியும், இரண்டு கார்களை வனப்பகுதியில் தூக்கி எறிந்தது.
'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என ரஜினி பாணியில் மீண்டும் வந்த ஒற்றை காட்டு யானை

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவ மலையில் நேற்று மாலை ஒற்றை காட்டு யானை அரசுப் பேருந்தை துரத்தியும், இரண்டு கார்களை வனப்பகுதியில் தூக்கி எறிந்தது.

இதில் மின்சார ஊழியர் ஓட்டுனர் சரவணன் என்பவர் காயமடைந்தார். இதையெடுத்து கோவை மாவட்ட கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் கணேசன் அறிவுறுத்தலின்படி பொள்ளாச்சி வனச்சரக அதிகாரி புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒற்றை காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் வனப்பகுதியில் தூக்கி வீசப்பட்ட கார்கள் கிரேன் மூலம் அகற்றப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில் வால்பாறை, நவமலை சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களில் வரவேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இன்று மாலை கவியருவி அருகே உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் முகாம் அருகில் ரஜினி படம் கபாலியில் கூறுவது போல் மீண்டும் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என வனத்துறையினர் முன்பு வந்து நின்றது வியப்பாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com