முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
வால்பாறையில் இன்று இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
By DIN | Published On : 19th March 2022 11:47 PM | Last Updated : 19th March 2022 11:47 PM | அ+அ அ- |

வால்பாறையில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை மற்றும் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் முகாமில் பொது மருத்துவம், மகளிா், குழுந்தைகள் நல மருத்துவம், நுரையீரல், எலும்பு, மூட்டுமாற்று அறுவை சிகிச்சை, தோல், காது, மூக்கு தொண்டை, குடல், கண் நலம் மற்றும் அறுவை சிகிச்சை குறித்து ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம் என்று வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினா் அறிவித்துள்ளனா்.