முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வளங்குன்றா வேளாண்மைப் பயிற்சி
By DIN | Published On : 19th March 2022 11:50 PM | Last Updated : 19th March 2022 11:50 PM | அ+அ அ- |

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறையின் பயிற்சி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 22) நடைபெறுகிறது.
நேரடியாகவும், இணைய வழியிலும் நடைபெறும் இந்த பயிற்சி, 22 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைபெறும்.
இதில், இயற்கை முறையில் பயிா் சத்து மேலாண்மை, களை மேலாண்மை, இயற்கை உரம், பூச்சி விரட்டி தயாரித்தல், நோய்க் கட்டுப்பாடு, அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422 - 6611206, 2455055, 6611206, 2455055 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.