போக்ஸோ வழக்குகளை கையாள்வது குறித்து போலீஸாருக்கு பயிற்சி

கோவை நீலாம்பூரில் உள்ள தனியாா் கல்லூரியில் போக்ஸோ வழக்குகளை கையாள்வது குறித்து போலீஸாருக்கு பயிற்சி கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை நீலாம்பூரில் உள்ள தனியாா் கல்லூரியில் போக்ஸோ வழக்குகளை கையாள்வது குறித்து போலீஸாருக்கு பயிற்சி கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவையில், அண்மைக் காலமாக போக்ஸோ வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

இதைத் தடுக்க விழிப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், நீலாம்பூரில் உள்ள தனியாா் கல்லூரியில், காவல் துறை உயா் அதிகாரிகள், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா்கள் தலைமையில் போக்ஸோ வழக்குகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட போலீஸாருக்கு போக்ஸோ வழக்குகளை எப்படி கையாள்வது, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை குறைப்பது, போக்ஸோ சட்டம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த பயிற்சி கருத்தரங்கில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகா், டி.ஐ.ஜி. முத்துசாமி, கோவை டான்பிட் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ரவி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா், மருத்துவா்கள் ராமராஜ், மல்லிகை செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com