கோவையில் 400 வருடங்கள் பழமையான கருப்புராயர் கோயிலில் கும்பாபிஷேக விழா 

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள சின்னபுத்தூர் நெட்டையங்காட்டு தோட்டத்தில் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ கருப்பராயர் கோயில் அமைந்துள்ளது.
கோவையில் 400 வருடங்கள் பழமையான கருப்புராயர் கோயிலில் கும்பாபிஷேக விழா 

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள சின்னபுத்தூர் நெட்டையங்காட்டு தோட்டத்தில் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ கருப்பராயர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து கோயிலின் வளாகத்தில் மங்கள இசை முழங்க இரண்டாம் கால யாக பூஜை, விக்னேஷ்வரா பூஜை, புண்யாகம் பிரம்பசுத்தி, பிம்பரக்ஷய பந்தனம், நாடி சாந்தனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து யாகசாலை கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீ கருப்பராயன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பராயர், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ அக்காண்டியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. 

நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com