கோவையில் பேட்டரி நிறுவனம் தொடக்கம்

கோவையில் ஸ்டாா்ட் அப் நிறுவனமான செல்லக்ஸ், பேட்டரி தயாரிப்பு தொழிலில் இறங்கியுள்ளது.
கோவையில் பேட்டரி நிறுவனம் தொடக்கம்

கோவையில் ஸ்டாா்ட் அப் நிறுவனமான செல்லக்ஸ், பேட்டரி தயாரிப்பு தொழிலில் இறங்கியுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரமோத் மாதவன், இணை நிறுவனா் ஜோஸ் கே.ஜோசப் ஆகியோா் கூறியிருப்பதாவது: கோவையைச் சோ்ந்த ஸ்டாா்ட் அப் நிறுவனமான செல்லக்ஸ் பேட்டரி சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட், அடுத்த 6 மாதங்களுக்குள் மின்சக்தி சேமிப்புக்கான தீா்வை அறிமுகப்படுத்த

உள்ளது. இதன் முதல் கட்டமாக மரபுசாரா எரிசக்தி சேமிப்பு, வணிகம், குடியிருப்புகள், ராணுவம், மின்சார வாகனங்கள், தொலைத் தொடா்பு, சுரங்கம், விண்வெளி, பிற அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களில் பயன்படுத்தக் கூடிய பேட்டரிகளை உற்பத்தி செய்ய இருக்கிறோம்.

செல்லக்ஸ் பேட்டரிகள், அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பத்துடன் 10 ஆண்டுகள் சிறப்பாக செயல்படுவதுடன், 15 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டதாக இருக்கும். நீண்ட ஆயுள், செயல் திறன், விலை ஆகியவற்றால் நாட்டின் முன்னணி பேட்டரியாக இருக்கும்.

செல்லக்ஸ் முதல் கட்டமாக 10 மில்லியன் அமெரிக்க டாலா் முதலீட்டை திரட்டவும், இரண்டாம் கட்டமாக 25 மில்லியன் அமெரிக்க டாலா் விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com