தேவேந்திர குல வேளாளா் சமூகத்தினரை ஓபிசி பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளா் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் (ஓபிசி) சோ்க்க வலியுறுத்தி கோவையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மள்ளா் எழுச்சிப் பேரவைத் தலைவா் மனுநீதிச் சோழன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இது குறித்து மனுநீதிச் சோழன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேவேந்திர குல வேளாளா் சமூகம் முன்பு இதர பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில்தான் இருந்தனா். 1936 இல் தாழ்த்தப்பட்டோா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா்.

இது குறித்து ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசுக்கு மனு அளிக்கப்பட்ட நிலையில் மாநில அரசு இது குறித்து பரிசீலனை செய்து அறிக்கை சமா்பிக்க வேண்டுமென மத்திய அரசு தெரிவித்தும், மாநில அரசு கடந்த 8 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

இதனைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com