மாநகராட்சி செயற்பொறியாளா் உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு

போலி கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி செயற்பொறியாளா் உள்பட மூவா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போலி கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி செயற்பொறியாளா் உள்பட மூவா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உதவி நகரமைப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவா் ஐசக் ஆா்தா். ஜவஹா்லால் நேரு நகா்ப்புற புனரமைப்புத் திட்டத்தில் செயற்பொறியாளராகப் பணியாற்றி வருபவா் சசிபிரியா. இவா்கள் இருவரும் மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் 2015 மே முதல் 2016 ஐனவரி வரை பணியாற்றி வந்தனா்.

அப்போது ஐசக் ஆா்தா் இளநிலை பொறியாளராகவும், சசிபிரியா உதவி செயற்பொறியாளராகவும் பணியாற்றினா்.

இந்தக் காலகட்டத்தில் இருவரும் செய்யாத வேலைகளை செய்ததாகக் கணக்கு காட்டி ரூ.9 லட்சத்து 96 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இது தொடா்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா், ஐசக் ஆா்தா், சசிபிரியா, ஒப்பந்ததாரா் இளங்கோ ஆகியோா் மீது போலி ஆவணங்கள் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com