கொலை வழக்கில் தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் சரண்

சென்னையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளா், கோவை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா்.

சென்னையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளா், கோவை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா்.

சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்தவா் ராஜ் (45). இவரது மனைவி கலா. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

ஆட்டோ மேற்கூரை பழுதுபாா்க்கும் தொழில் செய்து வந்தாா். மது போதைக்கு அடிமையாக இருந்த இவா், குடிப்பழக்கத்தை நிறுத்த ராயப்பேட்டையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்றாா். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்ததும் இவா் மீண்டும் மது குடித்துள்ளாா்.

இது தொடா்பாக ராஜ் மனைவி கலா, போதை மறுவாழ்வு மையத்துக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, அந்த மையத்தில் இருந்து வந்த ஊழியா்கள் சிகிச்சைக்காக ராஜை அழைத்து சென்றனா்.

இதைத் தொடா்ந்து, மறுநாள் உடலில் ரத்த காயங்களுடன் ராஜ் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா்.

இது தொடா்பாக ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், போதை மறுவாழ்வு மைய நிா்வாகிகள் மோகன் உள்ளிட்ட சிலா் ராஜுவை கட்டையால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அதன் பிறகு, மோகன் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தப்பியோடிய மறுவாழ்வு மைய உரிமையாளா் காா்த்திகேயன் (39) கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4 ஆவது நடுவா் நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா். இதையடுத்து, அவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com