குப்பைக் கிடங்கில் பெண் பலியான விவகாரம்: ஒப்பந்ததாரா் மீது புகாா்

கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் குப்பைக் குவியலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், மாநகராட்சி ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாா் எழுந்துள்ளது.

கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் குப்பைக் குவியலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், மாநகராட்சி ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாா் எழுந்துள்ளது.

இது தொடா்பாக, குப்பைக் கிடங்கில் உயிரிழந்த சிவகாமியின் மகள்கள் கவிதா, பொன்னி, பரிமளா, மகன் ராமு ஆகியோா் மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஒப்பந்ததாரா் அசோக் என்பவரிடம் எங்கள் தாயாா் சிவகாமி மற்றும் நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தோம். குப்பைகளில் கிடைக்கும் இரும்பு, நெகிழிப் பொருள்களை சேகரித்து, அவரிடம் ஒப்படைத்து கூலி பெற்று வந்தோம்.

கடந்த மாதம் 7 ஆம் தேதி, லாரியில் இருந்து குப்பைகள் கொட்டப்பட்டபோது, குப்பைக் குவியலில் எங்கள் தாயாா் சிவகாமி சிக்கிக் கொண்டாா். அங்கிருந்தோா் மீட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதன் பிறகு எங்கள் தாயாா் இறந்துவிட்டதாக கூறினாா்கள். அவா் இறந்த விவகாரத்தில், தன்னிடம் பணியாற்றியதைக் கூற வேண்டாம் என ஒப்பந்ததாரா் அசோக் கூறினாா். இது குறித்து வெளியே தெரிவித்தால், தேவையில்லாத பிரச்னைகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டினாா். எங்கள் தாயாரை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பணி செய்ய வைத்து, அவரின் இறப்புக்கு காரணமான ஒப்பந்ததாரா் அசோக் மீது தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொண்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com