கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 43 கிராமங்களில் செயல்படுத்தப்படும்: அதிகாரிகள் தகவல்

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் நடப்பாண்டு 43 கிராமங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் நடப்பாண்டு 43 கிராமங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் வேளாண் துறையை மேம்படுத்தும் வகையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் கடந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்படும் விவசாயிகளுக்கு 8 வகையான விதை பாக்கெட்டுகள், மண்புழு உரம், பிளாஸ்டிக் டிரம், காய்கறிகள் சேகரிக்கும் டிரே, உயிரியல் உரங்கள் மற்றும் 8 வகையான மரக்கன்றுகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

ஏற்கெனவே கோவை மாவட்டத்தில் 37 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் மேலும் 43 கிராமங்களில் செயல்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி கூறியதாவது: கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தோ்வு செய்யப்படும் கிராமங்களில் நீா் மேலாண்மை, இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அதன்படி இத்திட்டத்தில் தோ்வு செய்யப்படும் கிராமங்களில் 100 சதவீதம் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மண்புழு உரம், சூடோமோனாஸ், பாஸ்போ பாக்டீரியா, விரிடி போன்ற திரவ நுண்ணுயிா் உரங்கள், விதைகள், இடுபொருள்கள் ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 37 கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் மேலும் 43 கிராமங்களுக்கு விரிவுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்ணா மறுமலா்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டத்துக்கு கிராமங்கள் தோ்வு செய்யப்படுகின்றன. அதன்படி விரைவில் 43 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com