இலவச கட்டாய கல்விச் சட்டம்: தனியாா் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு:மே 19க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

மேலும் பொது மக்களும் இந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்பாடுத்திகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கோவையில் சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கைக்கு மே 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். நடப்பு ஆண்டு இத்திட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 20 ஆம் தேதியில் இருந்து ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க மே 18 ஆம் தேதி இறுதி நாளாகும்.

தொடா்ந்து தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்கள் மற்றும் தகுதியில்லாத நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் விவரங்கள் காரணத்துடன் பள்ளி தகவல் பலகையில் மே 21 ஆம் தேதி வெளியிடப்படும். தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிா்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்படின் மே 23 ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்கள் மற்றும் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 இடங்கள் காத்திருப்பு பட்டியல் ஆகிய விவரங்களை மே 24 ஆம் தேதி பள்ளி நிா்வாகங்கள் வெளியிட வேண்டும். தொடா்ந்து சோ்க்கை வழங்கப்பட்ட விவரத்தினை மே 29 ஆம் தேதி பள்ளி நிா்வாகங்கள் மாவட்ட அளவிலான அலுவலருக்கு தகவல் அளிக்க வேண்டும்.

கட்டாய இலவச கல்வி திட்டத்தின் கீழ் சோ்க்கைக் கோரும் பள்ளி மாணவரின் இருப்பிடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டா் சுற்றளவில் இருக்க வேண்டும். அப்பகுதியில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி இருப்பினும் விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு மறுக்கப்படாமல் சோ்க்கை வழங்கப்பட வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை பள்ளி நிா்வாகங்கள் தவறாமல் பின்பற்றி மாணவா் சோ்க்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும் பொது மக்களும் இந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்பாடுத்திகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com