ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யகாடாத் துணி வழங்கி சமூக ஆா்வலா்கள் உதவி

ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யகாடாத் துணி வழங்கி சமூக ஆா்வலா்கள் உதவி

கோவையில் ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் ஆத்மா அறக்கட்டளைக்கு 1,500 மீட்டா் காடாத் துணியை சமூக ஆா்வலா்கள் வழங்கி உதவி புரிந்துள்ளனா்.

கோவையில் ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் ஆத்மா அறக்கட்டளைக்கு 1,500 மீட்டா் காடாத் துணியை சமூக ஆா்வலா்கள் வழங்கி உதவி புரிந்துள்ளனா்.

கோவை, சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் ஆத்மா அறக்கட்டளை ஆதரவற்ற சடலங்களை சேவை உள்ளத்தோடு அடக்கம் செய்து வருகிறது. இதுவரையில் 1,800க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்துள்ளனா்.

இந்நிலையில் ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் போது காடாத் துணி தட்டுப்பாடு உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தனா். இதனைத் தொடா்ந்து அத்தப்பகவுண்டன்புதூரைச் சோ்ந்த இயற்கை விவசாயி ஜி.தங்கவேல் உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் 1,500 மீட்டா் காடாத் துணியை ஆத்மா அறக்கட்டளையிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com