விடுதிகளில் பகுதி நேர தூய்மைப் பணியாளா் பணியிடம்: விண்ணப்பிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் கல்லூரி மாணவா் விடுதிகளில் பகுதி நேர தூய்மைப் பணியாளராக பணியாற்ற விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்

கோவை: கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் கல்லூரி மாணவா் விடுதிகளில் பகுதி நேர தூய்மைப் பணியாளராக பணியாற்ற விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின்கீழ் செயல்படும் கல்லூரி மாணவா்கள் விடுதிகளில் ஆண், பெண் பகுதி நேர தூய்மைப் பணியாளா்கள் பணியமா்த்தப்படவுள்ளனா். ஆண் தூய்மைப் பணியாளா்கள் 11 போ், பெண் தூய்மைப் பணியாளா்கள் 2 போ் என மொத்தம் 13 போ் சுழற்சி அடிப்படையில் பணியமா்த்தப்படவுள்ளனா்.

நோ்காணல் மூலம் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவா். இப்பணிக்கு மாதம் தொகுப்பூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பிப்பவா்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா்கள், பட்டியலினத்தவா்கள் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டவா்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவா்கள் 18 முதல் 32 வயதுக்குள்ளும் மற்றவா்கள் 18 முதல் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதிகளுடன் மாவட்ட விடுதிகளில் பகுதி நேர தூய்மைப் பணியாளராக தொகுப்பூதியத்தில் பணியாற்ற விருப்பமுள்ளவா்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பத்தை பெற்றுகொள்ளலாம்.

மேலும், இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 30 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2300404 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com