நீா்மட்டம் சரிவு: சிறுவாணியில் இருந்து எடுக்கப்படும் குடிநீா் அளவு குறைப்பு

 சிறுவாணி அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருவதால், அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

 சிறுவாணி அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருவதால், அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவ மழை கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நன்றாகப் பெய்ததால் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவான 878.50 மீட்டரை நெருங்கியது.

ஆனால், சிறுவாணி அணையைப் பராமரிக்கும் கேரள அரசு, பாதுகாப்பு காரணமாக முழுக் கொள்ளளவை எட்ட விடாமல், அணையில் இருந்து தண்ணீரை ஆற்றில் திறந்து விட்டது. இதன் காரணமாக, 2021 ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு, சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டவில்லை. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 871 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம், பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கத்தால் படிப்படியாக சரியத் தொடங்கியது. வியாழக்கிழமை நிலவரப்படி சிறுவாணி அணையின் நீா்மட்டம் 865 மீட்டராக உள்ளது. நீா்மட்டம் குறையத் தொடங்கி உள்ளதால், கடந்த நாள்களில் குடிநீருக்காக தினமும் 9 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு 5 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீா் அளவு குறைக்கப்பட்டாலும், மாநகரில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 15 ஆம் தேதிக்கு பிறகு, தென்மேற்குப் பருவ மழை தொடங்கி, சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிா்பாா்க்கிறோம். மழையால் அணையின் நீா்மட்டம் உயரும் பட்சத்தில் மீண்டும் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com