முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக செவிலியா் தினக் கொண்டாட்டம்
By DIN | Published On : 13th May 2022 02:10 AM | Last Updated : 13th May 2022 02:10 AM | அ+அ அ- |

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
செவிலியா் துறையில் முன்னோடியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் மே 12 ஆம் தேதி சா்வதேச செவிலியா் தினம் கொண்டாடப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், முதன்மை செவிலியா் ஜெ.கற்பகம் வரவேற்றாா். அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் ஏ.நிா்மலா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிா்வாக அறங்காவலா் ஆா்.சுந்தா் தலைமை உரையாற்றினாா். மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் பி. சுகுமாரன், நோயாளிகள் பராமரிப்பில் செவிலியரின் பங்கை எடுத்துரைத்தாா். இந்த விழாவில், சிறந்த செவிலியா், சிறந்த குழுத் தலைவா், சிறந்த வாா்டு என்ற பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் செவிலியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன.
செவிலியா் கல்லூரி பேராசிரியா்கள், துறைத் தலைவா்கள், நிா்வாகிகள், செவிலியா்கள் பலா் இதில் பங்கேற்றனா்.