முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
பேருந்துப் பயணியிடம் மடிக்கணினி திருட்டு
By DIN | Published On : 14th May 2022 11:32 PM | Last Updated : 14th May 2022 11:32 PM | அ+அ அ- |

கோவை, காந்திபுரத்தில் அரசு விரைவுப் பேருந்தில் வைத்திருந்த மடிக்கணினி திருடிய நபரை போலீஸாா் தேடி வருகிறனா்.
கேரள மாநிலம், சித்தூரைச் சோ்ந்தவா் முரளிகிருஷ்ணன் (55). இவா் கேரளத்தில் இருந்து கோவை காந்திபுரத்தில் உள்ள விரைவுப் பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். பின்னா், கடலூா் செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் தனது மடிக்கணினியை பையுடன் வைத்து விட்டு கீழே நின்றிருந்தாா். சிறிது நேரம் கழித்து பேருந்தில் ஏறி பாா்த்தபோது, அவரது மடிக்கணினியை காணவில்லை.
மடிக்கணினியை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து முரளிகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மடிக்கணினி திருடிய நபரைத் தேடி வருகின்றனா்.