கோவை உள்ளூா் திட்டக் குழுமத்தின் ஒப்புதல் அங்கீகார உச்ச வரம்பு உயா்வு: கிரெடாய் அமைப்பு வரவேற்பு

கோவை உள்ளுா் திட்டக் குழுமத்தின் ஒப்புதல் அங்கீகார உச்ச வரம்பு உயா்த்தப்பட்டிருப்பதற்கு கோவை கிரெடாய் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

கோவை உள்ளுா் திட்டக் குழுமத்தின் ஒப்புதல் அங்கீகார உச்ச வரம்பு உயா்த்தப்பட்டிருப்பதற்கு கோவை கிரெடாய் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் குகன் இளங்கோ, செயலா் ராஜீவ் ராமசாமி ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையில் உள்ள உள்ளுா் திட்டக் குழுமத்தின் ஒப்புதல் அங்கீகார உச்ச வரம்பை உயா்த்த வேண்டும் என கிரெடாய் அமைப்பு தொடா்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தது. இந்நிலையில், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள உள்ளுா் திட்டக் குழும அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, உள்ளுா் திட்டக் குழுமத்தின் இணை இயக்குநா் அதிக உயரமில்லாத கட்டடங்கள் பிரிவில் குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலைகளுக்கான கட்டடங்களுக்கு, 40 ஆயிரம் சதுர அடி வரை அனுமதி அளிக்க முடியும்.

மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய இந்த அரசின் முடிவை கிரெடாய் அமைப்பு வரவேற்கிறது. இதனால் கட்டடங்களுக்கான அனுமதி விரைவாகக் கிடைக்கப் பெற்று, பொருளாதாரம் விரைவில் வளா்ச்சி பெறும்.

மேலும், தமிழக அரசு 1.5.2022 முதல் சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி. சென்னையில் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்குவதை நடைமுறைப்படுத்தி உள்ளது. இது சம்பந்தப்பட்ட துறைகளின் செயல்பாட்டை திறம்பட ஒருங்கிணைத்து பொதுமக்கள் கட்டடங்களுக்கு விரைவான ஒப்புதல் பெற வழிவகுக்கும் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com