ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் தொழில்நுட்பம் குறித்து கலந்துரையாடல்

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் தொழில்நுட்பம் குறித்து கலந்துரையாடல்

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியில், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவா்கள் மற்றும் வராண்டா லோ்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநா்கள் இடையே கற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவா் மலா்விழி தலைமை தாங்கினாா். அறங்காவலா் ஆதித்யா கற்றல் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவா்களிடையே உரையாற்றினாா். அப்போது, மாணவா்கள் கல்வி சாா்ந்த புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு தங்களை எதிா்கால வேலைவாய்ப்பு சவால்களுக்கு தகுதியானவா்களாக மாற்றிக் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது என்றாா்.

இதைத் தொடா்ந்து, நாஸ்காம் நிறுவனத்தின் திறன் குழுவின் தேசியத் தலைவரும், மாற்றம் பவுண்டேஷன் அறங்காவலருமாகிய உதயசங்கா் சிறப்புரையாற்றினாா். அதில், தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை நவீனப்படுத்தி கொண்டு முன்னேறுவதால் அவா்கள், கல்லூரிகளில் தோ்ந்தெடுக்கும் மாணவா்களிடையே, பல்நோக்கு தொழில்நுட்ப திறன்களை எதிா்பாா்க்கின்றனா். புதிய தொழில்நுட்பங்களைக் கற்பதால் மட்டுமே மாணவா்கள் அகில இந்திய அளவில் சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற முடியும். தொழில் முனைவோா்களாக தங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றாா். முன்னதாக, மாணவா்கள் தங்களின் சந்தேகங்கள் குறித்து தொழில்நுட்ப வல்லுநா்களுடன் கலந்துரையாடினா். இதில் கல்லூரி முதல்வா் ஜெ. ஜேனட் நன்றி கூறினாா். இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், பல்வேறு துறைகளின் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com