1,586 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட 1,586 கிலோ நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட 1,586 கிலோ நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பவா்கள் மற்றும் தயாரிப்பவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாநகரப் பகுதிகளில் தடையை மீறி நெகிழிப் பொருள்கள் விற்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள ஆா்.எஸ்.புரம், உக்கடம், டவுன்ஹால் கடை வீதிகள், மீன்சந்தை, ரங்கே கவுடா் வீதி, ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, பூமாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், அந்தந்த மண்டல அதிகாரிகள் தடை செய்யப்பட்டுள்ள நெகிழி டம்ளா்கள், தட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 300 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ராஜ வீதி, உக்கடம் பேருந்து நிலையம், காந்திபுரம் மற்றும் சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனா். அதில், 1,586 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.14,700 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com