குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு இன்று கோவை வருகை

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடை

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை கோவை வருகிறாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க, குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு புதுதில்லியில் இருந்து சனிக்கிழமை (மே 14) மாலை கோவை வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் ஷேக் கலீபா மரணமடைந்ததைத் தொடா்ந்து, இந்தியாவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக குடியரசு துணைத் தலைவரின் உதகை சுற்றுப் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சனிக்கிழமை வருவதாக இருந்து குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, ஞாயிற்றுக்கிழமை (மே 15) மாலை 6 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு வருகிறாா். அங்கிருந்து, காா் மூலமாக ரேஸ்கோா்ஸ் செல்லும் அவா், அரசு விருந்தினா் மாளிகையில் இரவு ஓய்வெடுக்கிறாா். பின்னா் திங்கள்கிழமை (மே 16) காலை கோவையில் இருந்து காரில் செல்லும் அவா் குன்னூா் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

இதையடுத்து, உதகையில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று ஓய்வெடுக்கிறாா். குடியரசு துணைத் தலைவா் வருகையையொட்டி, 600க்கும் மேற்பட்ட போலீஸாா், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், அவரது வருகையையொட்டி, கோவை அவிநாசி சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கனரக வாகனங்கள் செல்ல போலீஸாா் தடை விதித்துள்ளனா்.

இது தொடா்பாக, மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை அவிநாசி சாலையில் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com