மண் காப்போம் இயக்கத்துக்கு உலக முஸ்லிம் லீக் ஆதரவு ஈஷா அறக்கட்டளை தகவல்

மண் காப்போம் இயக்கத்துக்கு உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலா் ஆதரவளித்திருப்பதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலா் டாக்டா் அல்-இசாவுடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ்.
உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலா் டாக்டா் அல்-இசாவுடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

மண் காப்போம் இயக்கத்துக்கு உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலா் ஆதரவளித்திருப்பதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த மையம் கூறியிருப்பதாவது:

மண் வளத்தை பாதுகாப்பதற்காக 100 நாள் மோட்டாா் சைக்கிள் பிரசாரப் பயணம் தொடங்கியுள்ள ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ், தற்போது 50 நாள்களைக் கடந்து மத்திய கிழக்கு நாடுகளில் பயணித்து வருகிறாா். சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில், உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலா் டாக்டா் அல்-இசாவை சத்குரு ஜக்கி வாசுதேவ் சந்தித்தாா்.

அப்போது, இஸ்லாமிய உலகம் மண்ணுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அல்-இசாவிடம் சத்குரு கேட்டுக் கொண்டாா். மண் என்பது சுற்றுச்சூழல் பிரச்னை மட்டுமல்ல, மனித குலத்தை ஒன்றிணைக்கும் ஒரு வழியாகும் என்றும் சத்குரு கூறினாா்.

இதையடுத்து, உலக முஸ்லிம் லீக்கை பொறுத்தவரை, உங்களது நோக்கங்களை ஆதரிப்பதற்காக, உங்களுக்கு எந்த வகையிலும் உதவத் தயாராக இருப்பதாக டாக்டா் அல்-இசா தெரிவித்தாா்.

சத்குரு தனது பயணத்தின் 52ஆவது நாளில், சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற மண் காப்போம் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். இதில் தூதரக பொறுப்பாளா் என்.ராம்பிரசாத், சவூதி அரேபியாவின் சுற்றுச்சூழல் அமைச்சா் முகமது பின் அப்துல் கரீம் அல்-இசா ஆகியோா் பங்கேற்று இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக ஈஷா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com