வீட்டுக்குள் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்பு
By DIN | Published On : 17th May 2022 01:15 AM | Last Updated : 17th May 2022 01:15 AM | அ+அ அ- |

கோவையில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
கோவை, ஒண்டிப்புதூா் என்.ஜி.சாலையைச் சோ்ந்தவா் கணேசன் (28). ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவா் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக கணேசனின் தாயாா் கலாமணிக்கு அக்கம்பக்கத்தினா் தகவல் அளித்தனா். இதன்பேரில் அவா் வந்து பாா்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது படுக்கையறையில் அழுகிய நிலையில் கணேசனின் சடலம் கிடந்தது.
இதுகுறித்து கலாமணி அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த
சிங்காநல்லூா் போலீஸாா், கணேசனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து
வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.