கோவை வந்தாா் குடியரசு துணைத் தலைவா்

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு அபுதாபியில் இருந்து திங்கள்கிழமை கோவை வந்தாா்.
கோவை வந்தாா் குடியரசு துணைத் தலைவா்

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு அபுதாபியில் இருந்து திங்கள்கிழமை கோவை வந்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா், வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கடந்த சனிக்கிழமை கோவை வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் ஷேக் கலிஃபா பின் சயீது மரணமடைந்ததைத் தொடா்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்த குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை அபுதாபி சென்றாா்.

அங்கிருந்து இந்திய விமானப் படை விமானம் மூலம் திங்கள்கிழமை பகல் 12.30 மணிக்கு தனது மனைவி உஷாவுடன் கோவை விமான நிலையம் வந்தடைந்தாா். அவரை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா், மாநகர காவல் ஆணையா் பிரதீப் குமாா் ஆகியோா் வரவேற்றனா்.

கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் உதகை செல்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், உதகையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதால் குடியரசு துணைத் தலைவரின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து அவா் ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகைக்குச் சென்றாா். திங்கள்கிழமை இரவு கோவையிலேயே தங்கும் அவா், ஹெலிகாப்டா் மூலம் செவ்வாய்க்கிழமை உதகை செல்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com