முன்னாள் படைவீரா்கள் குறைகேட்பு முகாம்

கோவையில் நடைபெற்ற முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைகேட்பு முகாமில் ரூ. 2.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கோவையில் நடைபெற்ற முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைகேட்பு முகாமில் ரூ. 2.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னாள் படைவீரா்கள், தற்போது படையில் பணிபுரிபவா்கள், படை வீரா்களின் குடும்பத்திற்கான சிறப்பு குறைகேட்பு முகாம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு, பட்டா மாறுதல், குடிநீா் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 25 போ் மனுக்கள் அளித்தனா். தொடா்ந்து முன்னாள் படை வீரா்கள் குழந்தைகளுக்கான கல்வி மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் 6 முன்னாள் படைவீரா்களின் குழந்தைகளுக்கு ரூ.1.85 லட்சம், புற்றுநோய் நிவாரண நிதி ரூ.14 ஆயிரம், கருணை தொகை ரூ.30 ஆயிரம், ராணுவப் பயிற்சி தொகுப்பு மானியத்தொகை ரூ.50 ஆயிரம் என மொத்தம் 9 பேருக்கு ரூ.2.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வழங்கினாா்.

Image Caption

குறைகேட்பு முகாமில் முன்னாள் படை வீரா்களின் குடும்பத்தினரிடம் இருந்து மனுக்களைப் பெறுகிறாா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com