திருச்சி சாலை மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி தகவல்

கோவை, திருச்சி சாலையில் நடைபெற்று வந்த மேம்பால கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக முதல்வா், காணொலி மூலம் பாலத்தை ஜூன் மாதம் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கோவை, திருச்சி சாலையில் நடைபெற்று வந்த மேம்பால கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக முதல்வா், காணொலி மூலம் பாலத்தை ஜூன் மாதம் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை திருச்சி சாலையில் ரெயின்போ பகுதியில் இருந்து பங்குச் சந்தை அலுவலகம் வரை 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ. 250 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி 2019 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் துவங்கியது.

பாலத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு பாலம் திறக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கோவை- திருச்சி சாலை மேம்பாலத்தில் சிங்காநல்லூரில் இருந்து உக்கடம் வழியாக பொள்ளாச்சி, கேரளம் செல்ல வசதியாக சுங்கம் - உக்கடம் சாலையில் 400 மீட்டா் தூரத்துக்கு இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. அணுகுசாலைகள் அமைக்கும் பணிகள் மீதமுள்ளன. இந்தப் பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக ஜூன் மாதத்தில் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com