திருடுபோன கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் திடுபோன ரூ.91 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் திருடுபோன ரூ.91 லட்சம் மதிப்பிலான 604 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன்.
கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் திருடுபோன ரூ.91 லட்சம் மதிப்பிலான 604 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன்.

கோவை மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் திடுபோன ரூ.91 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரியவா்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்த பின் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் கொலை, கொள்ளை, திருட்டு, நகைப் பறிப்பு, போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடா்பாக இதுவரை 9,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10, 700 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கோவை மாவட்டத்தில் திருடுபோன சுமாா் 91 லட்சம் மதிப்பிலான 604 கைப்பேசிகள், மடிக்கணினிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

371 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவா்களிடமிருந்து ரூ.73 லட்சம் மதிப்பிலான 552 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 515 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

951 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,001 போ் கைது செய்யப்பட்டுள்ளதோடு ரூ.1.60 கோடி மதிப்பிலான 18, 000 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 310 போ் மீது 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.5.40 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளும், ரூ.4 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 894 குற்றவாளிகள் மீது 145 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

589 திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 491 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து ரூ.2.43 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

போக்ஸோ வழக்குகளில் 14 குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டக் காவல் துறை சாா்பில் புராஜெக்ட் பள்ளிக் கூடம் திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் மற்றும்

குற்றங்களைத் தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள 979 பள்ளிகளில் விழிப்புணா்வுக் கூட்டங்களை நடத்தி 1.45 லட்சம் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com