கோவை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல்
By DIN | Published On : 11th November 2022 08:55 PM | Last Updated : 11th November 2022 09:01 PM | அ+அ அ- |

பறிமுதல் செய்யப்பட்ட 7 கிலோ தங்கம்.
கோவை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக கோவை வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் பேரில் கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் அவ்விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்ததில் சந்தேகத்திற்கிடமான 20 நபர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க- நளினி விடுதலையை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய மக்கள்
அவர்களை சோதனை செய்ததில் சட்டை பேண்ட் பாக்கெட்டுகள், உடைமைகளில் தங்கம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களிடமிருந்து 7.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் அவற்றின் மதிப்பு 4.11 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.