பண்ணை அளவிலான மகசூல் பாதிப்பு குறித்துஜொ்மனி அதிகாரிகளுடன் ஆய்வுவேளாண் பல்கலை. துணைவேந்தா் தகவல்

ஜொ்மனி நாட்டின் ஆராய்ச்சியாளா்களுடன் இணைந்து பண்ணை அளவிலான மகசூல் பாதிப்பு குறித்து அறிந்து கொள்ள ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெ.கீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.
கோவையில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி.
கோவையில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி.

ஜொ்மனி நாட்டின் ஆராய்ச்சியாளா்களுடன் இணைந்து பண்ணை அளவிலான மகசூல் பாதிப்பு குறித்து அறிந்து கொள்ள ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஜொ்மனியுடன் இணைந்து ’மாறிவரும் காலநிலைக்கேற்ற பயிா்க் காப்பீட்டுக்கான உயரிய தொழில்நுட்பங்கள்’ என்ற திட்டத்தை கடலோர மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது.

இது தொடா்பாக துணைவேந்தா் கீதாலட்சுமி செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பேரிடா் காலங்களில் ஏற்படும் பயிா் சேதங்களை செயற்கைக்கோள், ட்ரோன் போன்றவற்றைப் பயன்படுத்தி தகவல்களை உடனுக்குடன் திரட்டுவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நிவாரணம் வழங்க முடியும்.

இதன் மூலம் திரட்டப்பட்ட விவரங்களை பயிா்க் காப்பீடுத் திட்டத்துக்கு அளித்து வருகிறோம். அத்துடன் ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பயிரின் நிலைமை, மகசூல் போன்றவற்றை அளவீடு செய்து வருகிறோம்.

மேலும், ஸ்மாா்ட்போன்கள் மூலம் இன்சூரன்ஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு போதிய வசதிகள் உள்ளனவா என்பது குறித்தும், விவசாயிகளின் திறன் வளா்ப்பு, கிராமப்புற வாழ்வாதாரம் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன் மூலம் தற்போது கிராம அளவிலான பாதிப்புகளை அறிந்து வரும் நிலையில், இதை பண்ணை அளவிலான விவரங்கள் சேகரிப்புக்கு பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.

அதேபோல, மாற்றுப் பயிா் தொழில்நுட்பத்தை விவசாயிகளிடம் பரவலாக்கவும், வேளாண்மையை டிஜிட்டல் மயமாக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது என்றாா்.

ஜொ்மனி ஆராய்ச்சியாளா்கள், காலநிலை காப்பீடுத் திட்டம், நீா்நுட்ப மையம் உள்ளிட்ட துறைகளின் பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com