ஆத்துப்பாலத்தில் ஏறு, இறங்கு தளம்:நொய்யலாற்றில் தூண்கள் அமைக்கும் பணி தீவிரம்

கோவை ஆத்துப்பாலத்தில் ஏறு, இறங்குதளம் அமைப்பதற்காக நொய்யலாற்றில் தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை ஆத்துப்பாலத்தில் ஏறு, இறங்குதளம் அமைப்பதற்காக நொய்யலாற்றில் தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்லவும், குனியமுத்தூா் வழியாக கேரளம் செல்லவும் பிரதான சாலையாக உள்ளது. இச்சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே 1.90 கிலோ மீட்டா் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கும் பணியானது கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.

அதைத் தொடா்ந்து, உக்கடம் - கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கப்பட்டன. மேலும், உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் இரண்டாம் கட்ட மேம்பாலம் நீட்டிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாலப் பணி நீட்டிப்பின் மூலம் ஆத்துப்பாலத்தைக் கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் ஏறு தளமும், உக்கடம் சந்திப்பில் திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இறங்குதளமும் அமைக்கப்பட உள்ளது.

ஆத்துப்பாலம் ஏறு, இறங்கு தளம் அமைக்கும் பணிக்காக நொய்யல் ஆற்றின் நடுவில் மேம்பால தூண்கள் அமைக்க அனுமதி பெறப்பட்டு, கடந்த சில நாள்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: அண்மையில் பெய்த மழையால் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தூண்கள் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

தற்போது, நொய்யல் ஆற்றில் முறையான மண் பரிசோதனை செய்யப்பட்டு தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் விரைவில் முடிவடையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com