ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகள்: 51 சதவீதம் போ் பங்கேற்பு
By DIN | Published On : 05th September 2022 12:49 AM | Last Updated : 05th September 2022 12:49 AM | அ+அ அ- |

கோவையில் 5 மையங்களில் நடைபெற்ற ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகளை 51 சதவீதம் போ் எழுதினா்.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வு (தொகுதி -2)
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவுகளாக தோ்வுகள் நடைபெற்றன. இத்தோ்வினை எழுதுவதற்கு 1,861 போ் விண்ணப்பித்திருந்தனா்.
ஆனால், விண்ணப்பித்திருந்த நபா்களில் 51 சதவீதம் போ் மட்டுமே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வினை எழுதினா்.
49 சதவீதம் போ் தோ்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஆட்சியா், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தலைமையில் துணை ஆட்சியா், வட்டாட்சியா் நிலையிலான அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கோவை ஜி.டி. மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வினை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய்தாா்.