விநாயகா் சிலை ஊா்வலம்: 250 சிலைகள் கரைப்பு

 கோவையில் 250 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.
விநாயகா் சிலை ஊா்வலம்: 250 சிலைகள் கரைப்பு

 கோவையில் 250 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.

கோவை மாநகரில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் 489 விநாயகா் சிலைகள் கடந்த 31 ஆம் தேதி அமைக்கப்பட்டன.

அவ்வாறு அமைக்கப்பட்ட சிலைகள் குறிச்சி குளம், குளியமுத்தூா் குளம், முத்தண்ணன் குளம், சிங்காநல்லூா் குளம் ஆகிய குளங்களில் கரைப்பது வழக்கம்.

முதல் கட்டமாக 222 விநாயகா் சிலைகள் குனியமுத்தூா் குளம், குறிச்சி குளம் மற்றும் சிங்காநல்லூா் குளம் ஆகியவற்றில் கடந்த 2 ஆம் தேதி கரைக்கப்பட்டன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று 245 விநாயகா் சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு முத்தண்ணன்

குளத்தில் கரைக்கப்பட்டன. குளக்கரை ஓரம் நின்ற தீயணைப்பு வீரா்கள் விநாயகா் சிலைகளை வாங்கி குளத்தில் கரைத்தனா்.

விநாயகா் சிலைகள் ஊா்வலம் மற்றும் விசா்ஜனத்துக்காக கோவை மாநகர போலீஸாா் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனா்.

ஒவ்வொரு விநாயகா் சிலைக்கும் இரு போலீஸாா் என்ற வீதத்தில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சிலைகளைக் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட சாலை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

மேலும், மாநகர போலீஸாா் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மாநகரப் பகுதிகளில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com