மாநகரில் ரூ.28.80 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

மாநகரில் ரூ.28.80 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

கோவை மாநகராட்சிப் பகுதியில் ரூ.28.80 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் கல்பனா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சிப் பகுதியில் ரூ.28.80 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் கல்பனா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 4ஆவது வாா்டுக்கு உள்பட்ட சரவணம்பட்டி பகுதியில் ரூ.8.80 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி, கிழக்கு மண்டலம் 9ஆவது வாா்டுக்கு உள்பட்ட விளாங்குறிச்சி, காந்தி வீதியில் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டுமானப் பணி என மொத்தம் ரூ.28.80 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் கல்பனா செவ்வாய்க்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, சரவணம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு உணவு வழங்கப்படுவதை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.ஆறுக்குட்டி, மண்டலத் தலைவா்கள் இலக்குமி இளஞ்செல்வி (கிழக்கு), கதிா்வேல் (வடக்கு), உதவி ஆணையா் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளா் செந்தில்பாஸ்கா், வாா்டு உறுப்பினா்கள் கதிா்வேலுசாமி, பூங்கொடி சோமசுந்தரம் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com