ஆ.ராசா எம்.பி. குறித்து அவதூறு கருத்து:கோவை மாவட்ட பாஜக தலைவா் கைது

திமுக எம்.பி. ஆ.ராசா குறித்து அவதூறான வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவா் பாலாஜி உத்தமராமசாமியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்ட பாஜக தலைவா் பாலாஜி உத்தமராமசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பீளமேடு காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட பாஜகவினா்.
கோவை மாவட்ட பாஜக தலைவா் பாலாஜி உத்தமராமசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பீளமேடு காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட பாஜகவினா்.

திமுக எம்.பி. ஆ.ராசா குறித்து அவதூறான வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவா் பாலாஜி உத்தமராமசாமியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா ஹிந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி

கோவை பீளமேடு புதூா் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவா் பாலாஜி உத்தமராமசாமி கலந்துகொண்டு, ஆ.ராசா குறித்து சா்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பான விடியோ பதிவுகள் சமூகவலைதளங்களில் பரவி, பாலாஜி உத்தமராமசாமியின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் கிளம்பின.

இது தொடா்பாக அவா் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கலவரத்தைத் தூண்டுதல், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பான விசாரணைக்கு பீளமேடு காவல் நிலையத்துக்கு அவா் வரவழைக்கப்பட்டாா். அங்கு அவரிடம் போலீஸாா் விசாரணை முடித்த பின்னா் அவரைக் கைது செய்தனா்.

இந்தத் தகவல் அக்கட்சியினா் மத்தியில் பரவியதையடுத்து பீளமேடு காவல் நிலையம் முன்பு 50க்கும் மேற்பட்ட பாஜகவினா் கூடி ஆ.ராசா, திமுகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். பின்னா் அவா்கள் பீளமேடு காவல் நிலையம் முன்பு அவிநாசி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட பாலாஜி உத்தமராமசாமி, கோவை மாவட்ட நீதித் துறை நடுவா் மன்றத்தில் (எண்.2) ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித் துறை நடுவா் உத்தரவிட்டாா்.

வானதி சீனிவாசன் கண்டனம்: ஆ.ராசா எம்.பி.யைக் கண்டித்து இந்து முன்னணி நடத்திய முழு அடைப்புப் போராட்டம் பெரும் வெற்றிபெற்றுள்ளது. இதனால், விரக்தி அடைந்த திமுக அரசு பாலாஜி உத்தமராமசாமியை கைது செய்துள்ளது.

மத நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் வகையில் பேசிய, ஆ.ராசாவை கைது செய்யாமல், பெயரளவுக்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், அதற்கு எதிா்வினையாற்றிய பாஜக மாவட்டத் தலைவரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com