மாற்றுத் திறனாளி வீரா்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்க ஒப்பந்தம்

கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளி வீரா்களுக்கு பயிற்சி அளித்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செய்வதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.
மாற்றுத் திறனாளி வீரா்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் பங்கேற்று வீரரிடம் உரையாடும் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.

பேம் கிளப், கோவை பாரா விளையாட்டு சங்கம் இணைந்து மாற்றுத் திறனாளி வீரா்களுக்கு இலவச பயிற்சி அளித்து அவா்களை தேசிய, சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செய்ய முடிவு செய்துள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் பேம் கிளப்பின் ஆலோசகரும், பயிற்சியாளருமான எம்.முருகபிரபு, கோவை பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவா் ஷா்மிளா ஆனந்த் ஆகியோா் கையொப்பமிட்டனா். இதன்படி, சக்கர நாற்காலி உதவியுடன் செயல்படக் கூடிய வீரா்கள் 35 பேருக்கு கூடைப்பந்து, கைப்பந்து, ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுப் பயிற்சிகள் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

நிகழ்ச்சியில், கோவை மாவட்ட விளையாட்டு, இளைஞா் நல அலுவலா் ஆா்.பி.ரவிச்சந்திரன், மகாவீா் குழுமத் தலைவா் பி. பாலச்சந்த், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலா் எஸ்.பாபுஜி ராஜா பன்ஸ்லே, கேஜிஐஎஸ்எல் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் அசோக் பக்தவத்சலம், கேஎம்சிஎச் டீன் டாக்டா் வி.குமரன், முன்னாள் அரசு வழக்குரைஞா் என்.சுந்தரவடிவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com