நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு
By DIN | Published On : 29th September 2022 12:00 AM | Last Updated : 29th September 2022 12:00 AM | அ+அ அ- |

வால்பாறை நகராட்சி அனைத்து அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் சங்க கூட்டமைப்பின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
வால்பாறை நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சங்கத் தலைவராக எம். செல்வராஜ் (துப்புரவு ஆய்வாளா்), கெளரவ தலைவராக எம். ஜலாலுதீன் (நகராட்சி மேலாளா்), செயலாளராக சி. அறிவுடைநம்பி (நகரமைப்பு ஆய்வாளா்) பொருளாளராக கி. ஜோதி (இளநிலை உதவியாளா்), துணைத் தலைவராக மு. ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா்களாக சு. சண்முகசுந்தரம், சா. கெளசல்யா, ப. தினேஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.