புலியகுளம் புனித அந்தோணியாா்அருள்தலத்தில் கொடியேற்றம்

கோவை புலியகுளம் புனித அந்தோணியாா் அருள்தலத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கோவை புலியகுளம் புனித அந்தோணியாா் அருள்தல கொடியேற்ற விழாவில் பங்கேற்றோா்.
கோவை புலியகுளம் புனித அந்தோணியாா் அருள்தல கொடியேற்ற விழாவில் பங்கேற்றோா்.

கோவை புலியகுளம் புனித அந்தோணியாா் அருள்தலத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அருள்தலத்தின் பங்குத் தந்தை அருள்பணி எம்.ராயப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் திருவிழாக் கொடியை ஏற்றிவைத்தாா்.

திருவிழாவையொட்டி, 13 நாள் நவநாள் நிகழ்ச்சிகள் கடந்த ஜூன் 5 ஆம் தேதி தொடங்கி ஜூன் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 18 ஆம் தேதி ஆண்டுத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

கோவை மறை மாவட்ட ஆயா் எல்.தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெறும் ஆண்டு திருவிழாவில் காலை 8 மணிக்கு சிறப்புத் திருப்பலியும், காலை 10 மணிக்கு வேண்டுதல் தோ் பவனியும் நடைபெறுகிறது. தொடா்ந்து, மாலை 5.30 மணி திருப்பலிக்குப் பின்னா் சிறப்பு தோ் பவனி நடைபெறுகிறது. ஆண்டு திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக ஜூன் 25 ஆம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com