குனியமுத்தூரில் இன்று மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்
By DIN | Published On : 04th January 2023 01:23 AM | Last Updated : 04th January 2023 01:23 AM | அ+அ அ- |

கோவை குனியமுத்தூரில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (ஜனவரி 4) நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, கோவை மின் பகிா்மான வட்டம், தெற்கு செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குனியமுத்தூா் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம், புதன்கிழமை (ஜனவரி 4) நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில், மேற்பாா்வைப் பொறியாளா் குப்புராணி கலந்து கொண்டு, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்க உள்ளாா். எனவே, மின்சாரம் தொடா்பான கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் இந்த முகாமில் மனுக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.