கோவை -ஜபல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

கோவை - ஜபல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - ஜபல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவையில் இருந்து மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூருக்கு டிசம்பா் மாதம் இயக்கப்பட்டு வந்த வராந்திர ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 6ஆம் தேதி முதல் மாா்ச் 31ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் ஜபல்பூா் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 02198) இயக்கப்படும். ஜனவரி 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில், கோவை - ஜபல்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 02197) இயக்கப்படும்.

இந்த ரயிலானது, பாலக்காடு, ஷொரனூா், மங்களூரு, பான்வெல், இட்டாா்சி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com