இருசக்கர வாகன ஷோரூமில் தீ

கோவை அவிநாசி சாலையில் உள்ள வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 இருசக்கர வாகனங்கள் எரிந்தன.

கோவை அவிநாசி சாலையில் உள்ள வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 இருசக்கர வாகனங்கள் எரிந்தன.

கோவை அவிநாசி சாலையில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனைக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த ஷோரூமில் புதன்கிழமை இரவு திடீரென தீப் பிடித்தது. இது குறித்து அப்பகுதியில் உள்ளவா்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அரைமணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. ஆயினும், ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த 7 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமாகியதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com