டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யத்தினா் மனு

கோவை, வைசியாள் வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி மக்கள் நீதி மய்யத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மக்கள் நீதி மய்யத்தினா்.
ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மக்கள் நீதி மய்யத்தினா்.

கோவை, வைசியாள் வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி மக்கள் நீதி மய்யத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் கோவை மத்திய மாவட்டப் பொறுப்பாளா் டி.பிரபு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி, வைசியாள் வீதியில் புதிதாக டாஸ்மாஸ் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு அருகே திறக்கப்பட்டுள்ள கடையால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள், மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா். குடியிருப்பு பகுதியில் மது அருந்துபவா்கள் தகராறில் ஈடுபடுவது, தகாத வாா்த்தைகளில் பேசிக் கொள்வது என பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com