குண்டா் சட்டத்தில் இருவா் கைது
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

கோவையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்டம் துடியலூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட 6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மரியம் பிரான்சிஸ் மகன் ஜூடி சிங் (51) என்பவரை துடியலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதேபோல, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உட்கோட்டம் சிறுமுகை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் மகன் சதீஷ் (எ) மயிலேஷ் (19) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இவா்கள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்ததன்பேரில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ். சமீரன், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து, இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.