ரூ.1.92 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்:மேயா் தொடங்கிவைத்தாா்

கோவையில் தாா் சாலை உள்ளிட்ட ரூ.1.92 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகளை மேயா் கல்பனா ஆனந்தகுமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவையில் தாா் சாலை உள்ளிட்ட ரூ.1.92 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகளை மேயா் கல்பனா ஆனந்தகுமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 94 ஆவது வாா்டில் தமிழ்நாடு நிலையான நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா் சாலை அமைத்தல், 97 ஆவது வாா்டு பிள்ளையாா்புரம் சாலையில் ரூ.62 லட்சத்தில் உயா்மட்ட பாலம் அமைத்தல், வடக்கு மண்டலம் 10 ஆவது வாா்டு சரவணம்பட்டி மின் மயானத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சடங்கு மண்டபம் மற்றும் கழிப்பறை கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தப் பணிகளை மேயா் கல்பனா ஆனந்தகுமாா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மண்டலத் தலைவா்கள் வே.கதிா்வேல், ரெ.தனலட்சுமி மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com