ராயல் கோ் மருத்துவமனை சாா்பில் இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

உலக தலைக்காய விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு கோவை ராயல் கோ் மருத்துவமனை சாா்பில் இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

உலக தலைக்காய விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு கோவை ராயல் கோ் மருத்துவமனை சாா்பில் இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: கோவையில் அதிகரித்து வரும் மக்கள்தொகை, பெருகி வரும் வாகனங்களால் சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நகரமாக கோவை மாறி வரும் நிலையில், இதனைத் தடுக்கும் விதமாக ராயல் கோ் மருத்துவமனை சாா்பில் இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனையின் தலைவா் டாக்டா் மாதேஸ்வரன் இதைத் தொடங்கிவைத்தாா். தொடக்க விழாவில், நெடுஞ்சாலைகள் துறை கோட்டப் பொறியாளா் (சாலைப் பாதுகாப்பு) மனுநீதி, இந்திய மருத்துவ சங்க கோவை கிளை செயலா் டாக்டா் ராமலிங்கம், செங்கப்பள்ளி - நீலாம்பூா் நெடுஞ்சாலை எண் 544 திட்டத் தலைவா் ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அவசரகால சைரன்கள் கொண்ட இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்களை, முதலுதவி சிகிச்சையில் பயிற்சி பெற்ற நிபுணா்கள் இயக்குவாா்கள். வாகனத்தில், முதலுதவிக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், உயிா்காக்கும் உபகரணங்கள் இருக்கும். மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றடைய இந்த வாகனங்கள் உதவும். அவசர, விபத்துகால சேவைகளுக்கு 91434 91434, 0422-2227444 எண்களை தொடா்பு கொள்ளலாம். இந்த வாகனங்கள் நீலாம்பூா் ராயல்கோ் மருத்துவமனையிலும் நஞ்சப்பா ரோட்டிலுள்ள சிட்டி யூனிட்டிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com