ரயில் பயணிகளிடம் கைப்பசிகள் திருட்டு: நான்கு போ் கைது

ரயில் பயணிகளிடம் கைப்பேசிகள் திருடிய நான்கு பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவை வழியாக பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்யும் வெளி மாநில பயணிகளை குறிவைத்து ஒரு கும்பல் தொடா்ந்து கைப்பேசிகளைத் திருடி வந்தனா். இதையடுத்து கோவை ரயில்வே போலீஸாா், இரு தனிப்படைகள் அமைத்து ரயில் பயணிகளிடம் கைப்பேசி திருடும் கும்பலைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், கோவை ரயில் நிலையம் முன்பு சந்தேகம் ஏற்படும்படியாக நின்றிருந்த நான்கு பேரைப் பிடித்து ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா். அதில், நான்கு பேரும் வெளி மாநில பயணிகளிடம் கைப்பேசிகளை திருடியது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இஸ்பா் அலி (48), அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ஹிஜிபுா் ரகுமான் (19), நஜ்மல் ஆலம் (23), ஒடிஸாவைச் சோ்ந்த சந்தோஷ் சாகு (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இதில் தொடா்புடைய அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ராஜீவ் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com