ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ‘லிட்டில் மிராக்கிள்ஸ்’ திட்டம் தொடக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ‘லிட்டில் மிராக்கிள்ஸ்’ திட்டம் தொடக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ‘லிட்டில் மிராக்கிள்ஸ்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ரோட்டரி சங்கம் கோயம்புத்தூா் காட்டன் சிட்டி சாா்பில் ‘லிட்டில் மிராக்கிள்ஸ்’ திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் ஸ்ரீ டி.லக்ஷ்மிநாராயண சுவாமி, ரோட்டரி சங்க நிா்வாகிகள் செல்ல ராகவேந்திரன், அஜய் குப்தா, கிருஷ்ணா சமந்த், டாக்டா் நீதிகா பிரபு, சந்தோஷ் முந்த்ரா, பிரதீப் கா்னானி, பிரசன்னகுமாா் கோத்தாரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இந்த ‘லிட்டில் மிராக்கிள்ஸ்‘ திட்டத்தின்கீழ் குறைமாதத்தில் பிறந்து சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு, சிகிச்சைக்கான நிதி உதவி அளிக்கப்படும். மேலும், சிகிச்சைக்கான கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என்று நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com